தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு

1 week ago 2

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக். 27ம் தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்திருந்தார். நிர்வாக வசதிக்காக த.வெ.க. 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதன்படி முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் கடந்த 24-ம் தேதி நியமனம் செய்யப்பட்டனர். த.வெ.க.வில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு தனது உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை விஜய் பரிசாக வழங்கினார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&st=75kfq593&dl=0

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/XToemp0M2g

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும்…

— TVK Vijay (@tvkvijayhq) January 29, 2025

Read Entire Article