“தமிழக மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்” - செல்வப்பெருந்தகை

4 months ago 12

சென்னை: தமிழக மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என குற்றஞ்சாட்டி சட்டப்பேரவையில் இருந்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவைக்கு வெளியே, அக்கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்ற வந்தபோது ஜனநாயகத்தின் அடிப்படையில் அவருக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். அவர் தொடர்ந்து தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லாத ஆளுநராக இருக்கிறார். அதுகூட பரவாயில்லை, ஆனால் எதிரான நிலையை எடுக்கிறார். மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு போன்றவற்றை ஆதரிக்கிறார்.

Read Entire Article