தமிழக பாஜ உட்கட்சி தேர்தலை நடத்த சக்கரவர்த்தி தலைமையில் 4 பேர் குழு நியமனம்

3 months ago 15

சென்னை: தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா வெளியிட்ட அறிவிப்பு: சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் அமைப்பு பருவம் 2024ல், அடிப்படை உறுப்பினர் சேர்க்கை பணியானது 2ம் கட்டம் முடிந்து, தீவிர உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் அமைப்பு தேர்தலை சிறப்பான முறையில் நடத்திட, தேசிய தலைமை ஒப்புதலுடன் மாநில தேர்தல் அதிகாரி மற்றம் இணை அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகிறது.

மாநில தேர்தல் அதிகாரியாக மாநில துணை தலைவர் எம்.சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தேர்தல் இணை அதிகாரிகளாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே.செல்வகுமார், மாநில செயலாளர் மீனாட்சி நித்யாசுந்தர், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்து.
இந்த குழு தமிழக பாஜகவின் அடுத்த மாநில தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கட்சி அமைப்பு தேர்தலை வழிநடத்தும்.

அதன் பிறகு மண்டல, மாவட்ட தலைவர்கள் தேர்தலை நடத்தும். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை உள்ளார். அவர் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது பாஜவிற்கு வேறு தலைவரை தேர்ந்தெடுக்கப்பட போகிறார்களா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடத்துவது தொடர்பாக, தமிழகம் உட்பட நாடு முழுதும் நியமிக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு வரும் 21ம் தேதி டெல்லியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

The post தமிழக பாஜ உட்கட்சி தேர்தலை நடத்த சக்கரவர்த்தி தலைமையில் 4 பேர் குழு நியமனம் appeared first on Dinakaran.

Read Entire Article