சென்னை: தமிழக குற்ற வழக்கு தொடர்(வு)த்துறை இயக்குநராக உயர் நீதிமன்ற அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணராஜாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநராக பணியாற்றிய சித்ராதேவி விருப்ப ஓய்வில் சென்றார். அதையடுத்து அந்த இடத்தில் தற்காலிக பொறுப்பு இயக்குநராக மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரான அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார்.