i) போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
(தாலுகா): 986 இடங்கள்.
அ. திறந்தவெளிப் போட்டி:
1. ஆண்கள்-419, பெண்கள்-179.
ஆ. துறைவாரியான ஒதுக்கீடு
1. ஆண்கள்-131, பெண்கள்-56.
இ. எக்சிக்யூட்டிவ் வார்டுகள் ஒதுக்கீடு
1. ஆண்கள்- 47, பெண்கள்-20.
ஈ. மினிஸ்ட்டிரியல் வார்டுகள் ஒதுக்கீடு
1. ஆண்கள்-5, பெண்கள்-2.
உ. விளையாட்டு ஒதுக்கீடு
1. ஆண்கள்- 36, பெண்கள்-15
ஊ. விளையாட்டு சாதனையாளர்களுக்கு ஒதுக்கீடு
1. ஆண்கள்-16, பெண்கள்-7.
ii) ஆயுதப்படை போலீஸ்
சப்-இன்ஸ்பெக்டர்- 360 இடங்கள்.
அ. திறந்தவெளிப் போட்டி:
1. ஆண்கள்-164, பெண்கள்-71.
ஆ. துறைவாரியான ஒதுக்கீடு
1, ஆண்கள்-51, பெண்கள்-22.
இ. எக்சிக்யூட்டிவ் வார்டுகள் ஒதுக்கீடு
1. ஆண்கள்-18, பெண்கள்-8.
ஈ. மினிஸ்ட்டிரியல் வார்டுகள் ஒதுக்கீடு
1. ஆண்கள்-2, பெண்கள்-1.
உ. விளையாட்டு ஒதுக்கீடு
1. ஆண்கள்-14, பெண்கள்-6.
ஊ. விளையாட்டு சாதனையாளர்களுக்கு ஒதுக்கீடு
1. ஆண்கள்-6, பெண்கள்-3.
சம்பளம்: ரூ.36,900- ரூ.1,16,600.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். முறையான கல்வித் திட்டத்தின் கீழ் பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். என்எஸ்எஸ், என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு சிறப்பு தகுதிக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வில் பொது அறிவு, உளவியல் மற்றும் விண்ணப்பதாரரின் தமிழ் மொழியறிவை பரிசோதிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.
உடற்தகுதி: ஆண்கள்- குறைந்தபட்ச உயரம்- 170 செ.மீ., (எஸ்சி/எஸ்டி/ அருந்ததியர்- 167 செ.மீ). மார்பளவு: சாதாரண நிலையில் 81 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., இருக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் திருநங்கைகள் குறைந்த பட்ச உயரம் 159 செ.மீ., இருக்க வேண்டும். எஸ்சி/ அருந்ததியர்/எஸ்டி பிரிவைச் சேர்ந்த பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ., இருக்க வேண்டும்.
உடற்தகுதி திறன் தேர்வு:
ஆண்கள்- 1.7 நிமிடங்களில் 1500 மீட்டர் தூரத்தை ஓடி முடிக்க வேண்டும். 5 மீட்டர் கயிறு ஏறுதல், 3.80 மீட்டர் நீளம் தாண்டுதல், 1.20 மீட்டர் உயரம் தாண்டுதல், 5 மீட்டர் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
பெண்கள்- 400 மீட்டர் தூரத்தை 2.30 நிமிடங்களில் ஓடி முடித்தல், 3 மீட்டர் நீளம் தாண்டுதல், 4.25 மீட்டர் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி, இடம் ஆகிய விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2025.
The post தமிழக காவல்துறையில் 1352 எஸ்ஐக்கள் appeared first on Dinakaran.