தமிழக அரசு துறைகளில் 3935 இடங்கள் : குரூப்-4 தேர்வு அறிவிப்பு

1 day ago 2

பணியிடங்கள் விவரம்:

கிராம நிர்வாக அதிகாரி- 215, ஜூனியர் அசிஸ்டென்ட்- (செக்யூரிட்டி அல்லாதது)- 1621, ஜூனியர் அசிஸ்டென்ட்-6, ஜூனியர் அசிஸ்டென்ட் (வனத்துறை)-5, ஜூனியர் அசிஸ்டென்ட் (செக்யூரிட்டி)-46, ஜூனியர் ரெவினியூ இன்ஸ்பெக்டர்-239, ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (ஆபீஸ்)-1, ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட்- 1, ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட்-1, டைப்பிஸ்ட்- 1099, டைப்பிஸ்ட் (லேபர் ஸ்டடீஸ்)-1, ஸ்டெனோ டைப்பிஸ்ட்- 368, பெர்சனல் கிளார்க்-2, அசிஸ்டென்ட்-54, கள உதவியாளர்- 19, பாரஸ்ட் கார்டு-97, பாரஸ்ட் வாட்ச்சர்-71, பாரஸ்ட் வாட்ச்சர் (டிரைபல் யூத்)-24, பாரஸ்ட் கார்டு-15, பாரஸ்ட் வாட்சர்-50.

வயது வரம்பு:
விஏஓ பணிக்கு: பொது பிரிவினர் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர் எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/முஸ்லிம்/மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 21 முதல் 42க்குள் இருக்க வேண்டும்.
இதர பணிகளுக்கு: பொது பிரிவினர்கள் 18 முதல்32க்குள் இருக்க வேண்டும். பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/முஸ்லிம் பிரிவினர்கள் 18 முதல் 34க்குள்ளிருக்க வேண்டும். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி பிரிவினர்கள் 18 முதல் 37க்குள் இருக்க வேண்டும்.

குறிப்பு: பிளஸ் 2/டிப்ளமோ/பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற எஸ்சி/எஸ்டி/ அருந்ததியர்/ மிகவும் பிற்பட்டோர்/எஸ்சி/முஸ்லிம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. இந்த வயது வரம்பு சலுகை விஏஓ பணிக்கு பொருந்தாது. விண்ணப்பதாரரின் வயது வரம்பு 1.7.2025 தேதியின்படி கணக்கிடப்படும்.
1. விஏஓ/ஜூனியர் அசிஸ்டென்ட்/பில் கலெக்டர் பணிக்கு: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. டைப்பிஸ்ட்: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங்கில் ஹையர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஏதாவதொன்றில் ஹையர் கிரேடு டைப்பிங் சான்றும், மற்றொன்றில் லோயர் கிரேடு டைப்பிங் சான்றும் பெற்றிருக்க வேண்டும்.

3. ஸ்டெனோ டைப்பிஸ்ட்: 10ம் வகுப்பு தேர்ச்்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங் மற்றும் சுருக்கெழுத்தர் படிப்பில் ஹையர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஏதாவதொன்றில் ஹையர் கிரேடு டைப்பிங், சுருக்கெழுத்து சான்றும், மற்றொன்றில் லோயர் கிரேடு டைப்பிங், சுருக்கெழுத்து சான்றும் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை/தொழிலாளர் நலத்துறை/சென்னை மாநகராட்சி/மாசு கட்டுப்பாட்டு வாரியம்/ தேர்தல் ஆணையம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள டைப்பிஸ்ட்/ஸ்டெனோ/கிளார்க்/அசிஸ்டென்ட்/ஜூனியர் எக்சிக்யூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். லேப் அசிஸ்டென்ட்/பாரஸ்ட் கார்டு பணிகளுக்கு அறிவியல்/கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பாரஸ்ட் கார்டு, பாரஸ்ட் வாட்ச்சர் பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் குறைந்தபட்சம் 163 செ.மீ., உயரம், மார்பளவு சாதாரண நிலையில் 79 செ.மீ., அகலம், விரிவடைந்த நிலையில் 84 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். பெண்கள்/திருநங்கைகள் குறைந்த பட்சம் 150 செ.மீ., உயரம், மார்பளவு சாதாரண நிலையில் 74 செ.மீ., அகலம், விரிவடைந்த நிலையில் 79 செ.மீ., இருக்க வேண்டும். (எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ., உயரம், பெண்கள் 145 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.).

டிஎஸ்பிஎஸ்சியால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது. அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒன் டைம் ரிஜிஸ்டிரேஷன் முறையில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.05.2025.

The post தமிழக அரசு துறைகளில் 3935 இடங்கள் : குரூப்-4 தேர்வு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article