“தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை உருவாகும்” - ஹெச்.ராஜா எச்சரிக்கை

3 months ago 22

திருவாரூர்: தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்னும் ஆறு மாத காலத்துக்குப் பிறகு சம்பளம் கொடுக்க முடியாத நிலை தமிழக அரசுக்கு உருவாகும் வாய்ப்பு உள்ளதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருவாரூரில் இன்று நடைபெற்றது. கட்சியின் மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட பொதுச் செயலாளர் வி.கே.செல்வம், பாஜக தமிழக செயற்குழு உறுப்பினர் ராகவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

Read Entire Article