சென்னை: திருநங்கையர், திருநம்பியர், இடைப்பாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோருக்கான சமூகநீதி உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்யும் கொள்கைகளை வகுக்கும்போது தனித்தனியாக வகுக்க வேண்டும் என சௌமியா அன்புமணி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைப்பாலினத்தவர் சமூகப் புறக்கணிப்புகளையும், அவமதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கல்கள் எதுவும் தன்பாலினச் சேர்க்கையாளர்களுக்கு கிடையாது. அவர்கள் பிறப்பின் அடிப்படையில் புறக்கணிக்கப்படுவது கிடையாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சௌமியா அன்புமணி வலியுறுத்தினார்.
The post தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு தனித்தனியாக கொள்கைகள் வகுக்க வேண்டும்: சௌமியா அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.