தனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்

4 months ago 11

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 7-ம் தேதி வெளியாக உள்ளது. தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியானது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். 'திருச்சிற்றம்பலம்' படத்தின் நாயகியான நித்யாமேனன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாயின.

இந்நிலையில் தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

Idly kadai First look Tom 5pm pic.twitter.com/iWgUiFMnrq

— Dhanush (@dhanushkraja) December 31, 2024

'இட்லி கடை' படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article