
சென்னை,
தான் பணியாற்றிய நடிகர்களில் மிகச்சிறந்த மற்றும் மிகவும் புத்திசாலித்தனமான நடிகர்களில் தனுஷும் ஒருவர் என்று பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் பாராட்டி இருக்கிறார்.
நடிகர் தனுஷ் இயக்குனர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் பாலிவுட்டில் உருவாகி வரும் படம் 'தேரே இஷ்க் மெய்ன்'. இதற்கு முன்பு தனுஷ் நடித்த 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற பாலிவுட் படங்களை இவர்தான் இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்திருக்கிறார். மும்பை, ஐதராபாத், டெல்லி போன்ற பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைந்திருக்கிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு புகைப்படங்களை பகிர்ந்த கிரித்தி சனோன், தான் பணியாற்றிய நடிகர்களில் மிகச்சிறந்த மற்றும் மிகவும் புத்திசாலித்தனமான நடிகர்களில் தனுஷும் ஒருவர் என்றும், அவருடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் கூறி இருக்கிறார்.
இந்த படம் வருகிற நவம்பர் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.