தனுஷை பாராட்டிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா

2 weeks ago 5

சென்னை,

தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி, நடித்த 'ராயன்' படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது.

இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்தப் படம் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், பின்னர் பிப்ரவரி 21-ம் தேதிக்கு தள்ளிப்போனது. இந்த நிலையில், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை தனுஷுடன் பார்த்த எஸ்.ஜே.சூர்யா தனுஷுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தனுஷுடன் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை பார்த்தேன். ஜாலியாக இருந்தாலும் எமோஷனலான, தனித்துவமான படமாகவும் இருந்தது. தனுஷுக்கு ஒரு கேள்வி. 'ராயன்' படத்திற்கு பின் பிஸியாக இருந்தபோதும் எப்படி உடனே ஒரு ஜாலியான படத்தை எடுத்தீர்கள்? படக்குழுவினருக்கு வாழ்த்துகள்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read Entire Article