தனுஷிடம் கதை சொல்லி இருக்கிறேன் - இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து

17 hours ago 1

சென்னை,

கடந்த 2020ம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் 'ஓ மை கடவுளே' எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இந்த படத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'டிராகன்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியானது. இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 51-வது திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிலம்பரசனின் ரசிகரான அஷ்வத் தனது மூன்றாவது திரைப்படத்தில் அவரையே இயக்குகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் 2026ல் ரிலீஸ் ஆகும் எனவும் சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, "நான் நடிகர் சிலம்பரன் ரசிகர் தான். ஆனால் எனக்கு நடிகர் நடிகர் தனுஷையும் பிடிக்கும். மேலும், நான் அவரிடம் கதை ஒன்றையும் கூறியிருக்கிறேன். அது காதல், ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த கதையை கொண்ட படம் ஆகும்" என்று தெரிவித்தார்.

Read Entire Article