மகளிர் பிரீமியர் லீக்: வெளியேற்றுதல் சுற்றில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை

5 hours ago 1

மும்பை,

3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடரில், மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கார்ட்னெர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹெய்லி மேத்யூஸ் மற்றும் நாட் ஸ்கைவர் பிரண்ட் தலா 77 ரன்கள் அடித்தனர். குஜராத் தரப்பில் டேனியலி கிப்சன் 2 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் 214 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 19.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக டேனியலி கிப்சன் 34 ரன்களும், போபி லிட்ச்பீல்டு 31 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் மேத்யூஸ் 3 விக்கெட்டுகளும், அமெலியா கெர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதே மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Read Entire Article