சென்னை: பாமக தலைவர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் சேர்க்கை கட்டணம் என்ற பெயரிலும், சிறப்பு வகுப்புகள் என்ற பெயரிலும் பெற்றோர்களிடம் தேவையற்ற கட்டணங்களை நவீன முறையில் வசூல் செய்து வருகிறார்கள். பள்ளி கல்வித்துறையின் வழிகாட்டு முறையை சிறிது அளவு கூட இவர்கள் பின்பற்றவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது.
அந்த வகையில் சேர்க்கை கட்டணம் என்பது ரூ.10 ஆயிரத்தில் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை வசூல் செய்யப்படுகிறது. அதேபோன்று சிறப்பு வகுப்பு என்ற பெயரில் ரூ.25 ஆயிரத்தில் தொடங்கி ரூ.35 ஆயிரம் வரை வசூல் செய்யப்படுகிறது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் காலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும் மாலையில் ஒரு மணி நேரத்திற்கு பிறகும் இல்லத்திற்கு செல்ல வேண்டும். அப்படி என்றால் 2 மணி நேரம் கூடுதலாக வகுப்பு நடத்துகிறார்கள். 6 மணி நேரத்தில் நடத்திட முடியாத பாடத்தினை இரண்டு மணி நேரத்தில் என்ன நடத்த போகிறார்கள் இவர்கள். முறைகேடாக கல்வி கட்டணங்களை வசூலிப்பதற்காகவே இவ்வாறு செயல்படுவதாக தெளிவாக தெரிகிறது. எனவே இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு கட்டண வசூல் தடுக்க ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.