தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டப்படி மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும்: அன்புமணி

3 hours ago 4

சென்னை: தமிழகத்தின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத இடங்களுக்கான சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, மாநில பாடத்திட்டப் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

Read Entire Article