தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட ஈகோ பிரச்சினை - உடன் பணியாற்றிய இளைஞரைக் கொன்ற 4 பேர்.!

6 months ago 19
சேலத்தில் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட ஈகோ பிரச்சினையால் உடன் பணியாற்றிய இளைஞருக்கு மதுவில் விஷம் கலந்துகொடுத்து கொன்றதாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ட்ரேடிங் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்த செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த கணேஷ் என்ற இளைஞர், அதிகம் மது குடித்ததால் உயிரிழந்ததாக் முதலில் கூறப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனையில் மதுவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. தனியார் நிறுவன ஊழியரான அன்னதானப்பட்டியை சேர்ந்த யுவராஜ், முறைகேடு செய்ததாகக் கூறி அவர் வகித்து வந்த மண்டல மேலாளர் பொறுப்பு, சக ஊழியரான கணேஷிடம் ஒப்படைக்கப்பட்ட ஆத்திரத்தில் அவரை நண்பர்களுடன் சேர்ந்து யுவராஜ் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
Read Entire Article