தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரி கல்வி கட்டணத்தை உயர்த்த வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

3 months ago 16

சென்னை: தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் கல்விக் கட்டண நிர்ணயக் குழு இரு வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தனியார் தொழிற்கல்வி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க கட்டண நிர்ணயக் குழுவை நியமித்து தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த 2022-23, 2023-24, 2024-25-ம் ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து, நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டது.

Read Entire Article