தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை: இபிஎஸ்ஸுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

1 month ago 5

சென்னை: “தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி புரிந்துக் கொள்ள வேண்டும். ஓசூர் நீதிமன்றம் சம்பவம், தஞ்சையில் ஆசிரியை கொலை இரண்டும் தனிப்பட்ட விவகாரங்களின் அடிப்படையில் நடந்தவை. துாத்துக்குடி சம்பவத்தில் நடந்த உயிரிழப்புதான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை.” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார் .

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (நவ.21) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீ்திமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். முதலில் அவர் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக தன்னை பரிசிலீத்துக் கொள்ள வேண்டும்.

Read Entire Article