கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தனித்து போட்டியிடப்போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவித்தார். மம்தாவின் இந்த பேச்சை காங்கிரஸ் கேலி செய்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் சுபாங்கர் சர்க்கார் கூறுகையில்,’ மம்தாவின் கருத்துக்கள் தேவையற்றது.
டெல்லி தேர்தலுக்குப் பிறகு காங்கிரசை புறக்கணித்ததன் தவறை புரிந்து கொண்ட பல கட்சிகளுக்கு ஏற்பட்ட பீதியின் விளைவு இதுவாகும். எங்கள் கட்சி முக்கியமில்லை என்றால், மாநில கட்சிகள் காங்கிரசைப் பற்றி ஏன் கவலைப்படுகின்றன? 2011ல் திரிணாமுல் ஆட்சிக்கு வர உதவியது காங்கிரஸ் என்பதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது’ என்றார்.
The post தனித்து போட்டி அறிவிப்பு; மம்தா பயந்துவிட்டார்: காங்கிரஸ் கிண்டல் appeared first on Dinakaran.