தனி நபர் உரிமையை மீறும் ஆவணங்களை ஏற்கக் கூடாது - உயர் நீதிமன்ற நீதிபதி

3 months ago 14
தனிநபர் உரிமையை மீறி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அவற்றை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. பரமக்குடியை சேர்ந்த தம்பதியின் விவாகரத்து வழக்கில், மனைவிக்கு தெரியாமல் அவரது கைப்பேசியை எடுத்து ஓடிபி எண்ணை பெற்று அந்த எண்ணிற்கு வந்த அழைப்புகளின் பட்டியலை அவரது கணவர் பதிவிறக்கம் செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என மனைவி தாக்கல் செய்த மனுவை பரமக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மனைவியின் மனுவை தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார்.
Read Entire Article