மும்பை: கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான பாபா சித்திக் கூலிப் படையினரால் மும்பையின் பாந்த்ரா பகுதியில் அவருடைய அலுவலகம் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தனது தந்தையின் கொலை குறித்து அவரது மகனும் வந்த்ரே தொகுதி எம்எல்ஏவுமான ஜீஷான் சித்திக் வெளியிட்ட பதிவில், ‘அவர்கள் என் தந்தையை அமைதிப்படுத்தினார்கள்.
ஆனால், அவர் ஒரு சிங்கம் என்பதை மறந்துவிட்டனர். அவருடைய கர்ஜனை என்னுள்ளே இருக்கிறது. அவருடைய போராடும் குணம் என் நரம்புகளில் உள்ளது. அவர் நியாயத்துக்காகவும் மாற்றத்துக்காகவும் போராடினார். அதற்காக எதையும் எதிர்க்கத் தயாராக இருந்தார். அவரை வீழ்த்தியவர்கள் வெற்றி பெற்றதாகக் கருதி தற்போது என் மீது பார்வையை திருப்பியுள்ளனர். அவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், சிங்கத்தின் ரத்தம் என் நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. நான் இங்கே அச்சமின்றி இருக்கிறேன். அவர்கள் என் தந்தையை எடுத்துக் கொண்டனர். ஆனால், அந்த இடத்திலிருந்து நான் மேலே எழுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post தந்தையை வீழ்த்தியவர்களுக்கு எச்சரிக்கை; என் நரம்பில் சிங்கத்தின் ரத்தம் ஓடுகிறது: மறைந்த பாபா சித்திக்கின் மகன் கோபம் appeared first on Dinakaran.