தந்தையை கட்டையால் தாக்கிய மகன் கைது

3 months ago 25

சேலம், செப். 29:சேலம் அடுத்த நிலவாரப்பட்டி மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம்(55). இவரது மகன் நவீன்(27). தந்தை, மகனுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே, கடந்த 26ம் தேதி இரவு, நவீனின் மகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, மாணிக்கம் சீலநாய்க்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பேத்தியை அழைத்துச் சென்றார். தகவலறிந்து அங்கு வந்த நவீன், குடிபோதையில் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அங்கிருந்த கட்டையால், தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த மாணிக்கம், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நவீனை கைது செய்தனர்.

The post தந்தையை கட்டையால் தாக்கிய மகன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article