தந்தை சந்திரசேகர் கூறியதைப்போல் விஜய்யை சுற்றி இருந்த கிரிமினல்கள் என்ன ஆனார்கள்? சபாநாயகர் அப்பாவு கேள்வி

3 months ago 12

நெல்லை: பாபநாசம் அணையில் இருந்து பிசான நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைத்த பின்னர் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி: யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். அதுபோல் விஜய்யும் கட்சி ஆரம்பித்துள்ளார். புஸ்சி ஆனந்த் நடிகர் விஜய்யின் கட்சிக்கு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதுச்சேரி பா.ஜ. அமைச்சர் நமச்சிவாயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்.
பா.ஜ. உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்களுடன் நெருக்கமான உறவு உள்ளது.

பாஜவுடன் நெருக்கமாக இருப்பவர் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஏ டீம், பி டீம் இல்லை என கூறுவது தான் சந்தேகத்தை கிளப்புகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்க்கும், அவரது தந்தைக்கும் சிறு பிரச்னை வந்த போது அவரது தந்தை நடிகர் சந்திரசேகர் கூறுகையில் என் மகனை சுற்றி கிரிமினல்கள் தான் இருக்கின்றனர் என்றார். இதை நான் சொல்லவில்லை. விஜய்யின் தந்தை தான் கூறினார். இப்போது கிரிமினல்கள் நல்ல ஆளாகியிருக்கலாம். எனக்கு தெரியாது. இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

The post தந்தை சந்திரசேகர் கூறியதைப்போல் விஜய்யை சுற்றி இருந்த கிரிமினல்கள் என்ன ஆனார்கள்? சபாநாயகர் அப்பாவு கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article