கண்டமங்கலம், பிப். 25: கண்டமங்கலம் அருகே உள்ள மிட்டா மண்டகப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவரது மனைவி கவுசல்யா. இவர்களது ஒன்றரை வயது குழந்தை ஜீவமித்ரா. கடந்த 21ம் தேதி வீட்டில் உள்ள பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்து இருந்தனர். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜீவமித்ரா திடீரென நிலை தடுமாறி தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து விட்டது. உடனே குழந்தையை மீட்டு, மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது. இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை மூச்சு திணறி சாவு appeared first on Dinakaran.