தேவையான பொருட்கள்
1 கட்டு கீரை
10 சின்ன வெங்காயம்
1 தக்காளி
3 பச்சை மிளகாய்
3டீ ஸ்பூன் சாம்பார் பொடி
கடுகு, உளுந்து தாளிக்க
ஒரு பிடிகருவேப்பில்லை
1/2டீ ஸ்பூன் பெருங்காயம்
5 பல் பூண்டு
உப்பு, எண்ணெய் தாளிக்க
3/4 கப் துவரம் பருப்பு
செய்முறை:
பருப்பை கழுவி, பூண்டு காயம், தண்ணீர் சேர்த்து மூன்று சத்தம் வைத்து இறக்கவும்.ஒரு கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பில்லை சேர்த்து தாளித்து கொள்ளவும்.அதனுடன் வெங்காயம் சேர்த்துவதக்கவும்.வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி, பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும், உப்பு போட்டு வேக வைக்கவும்.அறிந்த கீரை சேர்த்து வதக்கவும் 5 நிமிடம் வதக்கியதும். சாம்பார் பொடி சேர்க்கவும். பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
நெய் விட்டு பரிமாறவும்.
The post தண்டு கீரை சாம்பார் appeared first on Dinakaran.