தண்டவாளத்தை கடந்தபோது வெவ்வேறு இடங்களில் ரயில் மோதி இருவர் பலி

3 weeks ago 5

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இருவேறு இடங்களில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இருவர் ரயில் மோதி பரிதாபமாக பலியாகினர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர்-செஞ்சிபானம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த அந்தப்பெண் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இறந்த பெண் வெந்தய கலரில் புடவையும், சிகப்பு கலரில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தார்.

இதேபோல், திருவள்ளூர் அடுத்த மணவூர்-திருவாலங்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. அவர் சிமெண்ட் கலரில் பேண்ட்டும், கத்திரிப்பூ கலரில் டி-ஷர்ட்டும் அணிந்திருந்தார். மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் குறித்தும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தண்டவாளத்தை கடந்தபோது வெவ்வேறு இடங்களில் ரயில் மோதி இருவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article