தண்டவாள பராமரிப்பு பணி; கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்!

5 hours ago 2

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி – பொன்னேரி ரயில் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஜூலை 8, 10 ஆகிய தேதிகளில் 26 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை சென்னை – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

 

The post தண்டவாள பராமரிப்பு பணி; கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்! appeared first on Dinakaran.

Read Entire Article