தர்மபுரி, மே 8: தர்மபுரி மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், பழைய தர்மபுரி நகரில் நடந்த அதிரடி சோதனையில் 2 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ், உத்தரவின் பேரில் நேற்று மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம், ஊராட்சி ஒன்றியம் சார்பில் மாசு கட்டுப்பாடு பொறியாளர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா, மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் லாவண்யா உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பழைய தர்மபுரியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என சோதனை மேற்கொண்டனர்.
இதில் ஒரு வீட்டின் உள்ளே தடைசெய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபைகள், பேப்பர் கப்புகள், பேப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் என சுமார் 2 டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், இதுபோன்ற தொடர் சோதனைகள் நடைபெறும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகளை விற்பனை செய்யக்கூடாது. மீறினால், பறிமுதலுடன், கடும் அபராதம் விதிக்கப்பட்டு லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.
The post தடை செய்யப்பட்ட 2 டன் கேரி பைகள் பறிமுதல் appeared first on Dinakaran.