தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதம்

2 weeks ago 2

ஈரோடு, ஜன.23: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், அதனை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில், ஈரோடு மாநகராட்சி 33வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் உள்ள மளிகை மற்றும் பெட்டிகளில், நேற்று மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அப்பகுதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான மாளிகை கடையில் மேற்கொண்ட சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 700 கிராம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அப்பொருளை பறிமுதல் செய்த அலுவலர்கள், கடை உரிமையாளர் பாலமுருகனுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர்.

The post தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article