தஞ்சாவூர், பிப்.15: பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி ரயில்வே எலக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் ரயில்வே எலக்ட்ரிக்கல் அலுவலகம் முன்பு நேற்று எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, எஸ்.ஆர்.எம்.யூ தஞ்சை கிளை தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் வேலு, அரியலூர் கிளை செயலாளர் செல்வகுமார், கிளை தலைவர்கள் தமிழரசு (கும்பகோணம்), பிரபாகரன் (திருவாரூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை பொதுச்செயலாளர் ஜெயக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். இந்தஆர்ப்பாட்டத்தில், ரயில்வே எலக்ட்ரிக்கல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ஒய்வறைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். குடியிருப்புகளுக்கு தடையில்லா மின்வினியோகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பொருளாளர் செந்தில் நன்றி கூறினார்.
The post தஞ்சையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி ரயில்வே எலக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.