தஞ்சாவூர்,பிப்.10: தஞ்சாவூர் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் புதுக்கோட்டை சாலை எஸ்பிசிஏ மைதானத்தில் நாய்கள் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் மாவட்ட எஸ்பி ராஜாராம் நேற்று தொடங்கி வைத்தனர்.
பாரம்பரிய நாய் இனங்களை பாதுகாக்கவும், செல்லப் பிராணிகள் மீதான நமது ஈர்ப்பை அதிகப்படுத்தவும், ஆதரவற்றை சுற்றி திரியும் நாய்களை தத்தெடுக்கவும், பிராணிகள் வதைக் கொடுமையில் சிக்காமல் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நாய்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியில் நாட்டு மற்றும் வெளிநாட்டு நாய்கள், ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, ஆலங்கு, கொம்பை, ஜெர்மன் ஷெபர்ட், லாப்ரடோர் ரெட்ரீவர, சைபீரியன் ஹஸ்கி, கோல்டன் ரெட்ரீவர போன்ற பல்வேறு வகைகளை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் இடம் பெற்றன.
சிறந்த நாட்டு மற்றும் அந்நிய வகைகளுக்கு விருதுகளும். நாய்களின் புத்திசாலித்தனம் மற்றும் கட்டுப்பாட்டுத்திறன் பரிசோதிக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது. சிறந்த நாய் பராமரிப்பு மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்த வல்லுநர் விளக்கம் அளித்தனர். பங்கேற்கும் அனைத்து நாய்களுக்கும் வெறிநாய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் நாய்கள் கண்காட்சியினை குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கால்நடை துறை மருத்துவர்கள், SPCA அலுவல் சாரா உறுப்பினர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ், முகமது ரபி, விஜயலட்சுமி, சதீஷ்குமார், பொறியாளர் முத்துக்குமார், பட்டையகணக்காளர் ராகவி ஆகியோர் செய்து இருந்தனர்.
The post தஞ்சையில் நாய்கள் கண்காட்சி appeared first on Dinakaran.