தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

3 months ago 14

தஞ்சை,

தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. 21 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாளை 10-ந் தேதி கோவிலில் குடமுழுக்கு விழா நடக்கிறது.

இதை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, மகா கணபதி யாகத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக யாகம், வாஸ்து சாந்தி, மகாலட்சுமி யாகம், சாந்தி யாகம், மூர்த்தி யாகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில், தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கை ஒட்டி நாளை உள்ளூர் (பிப்.10) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிக்கை வெளியிட்டுள்ளார். தஞ்சை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article