தஞ்சை பஸ்நிலைய பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடமாகும் அவலம்

2 months ago 12

 

தஞ்சாவூர், நவ. 17: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலைய சாலையோரங்களை கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சிவக ங்கை, மதுரை, திருநெல்வேலி, கோயமுத்தூர், தென்காசி, சென்னை, பெங்களூர், விழுப்புரம், திருவண்ணாமலை,கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன.

இதனால், தினசரி லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதற்காக, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு கழிவறைகள் உள்ளன. அதில், மாநகராட்சி சார்பில் இலவச கழிப்பிடமும் உள்ளது. ஆனால், அங்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலை ஓரங்களிலேயே சிறுநீர் கழித்து செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சி சார்பாக அந்த பகுதியில் சிறுநீர் கழிக்க கூடாது என அறிவிப்பு பலகை வைத்தும், அதையும் பொருட்படுத்தாமல் சிலர் சிறுநீர் கழித்து வருகின்றனர். எனவே, சாலை ஓரங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post தஞ்சை பஸ்நிலைய பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடமாகும் அவலம் appeared first on Dinakaran.

Read Entire Article