தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை ஓய்ந்ததால் நெல் வயல்களில் தேங்கிய நீரை வடிகட்டும் பணி தீவிரம்

3 months ago 10

தஞ்சாவூர், டிச. 2: தஞ்சை மாவட்டத்தில் மழை ஓய்ந்ததால், கடந்த 3 நாட்களாக சம்பா நெல் வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் 3 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்வர். தற்போது, 2.40 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்து முடிந்த நிலையில், நடவு பணிகள் தீவிரமாக நடந்தபோது, தொடர்மழை காரணமாக நடவுப் பணிகள் சுணக்கம் அடைந்தன.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்ததால், நெல் வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்களை மூழ்கடித்தது. இதில், 2 ஆயிரத்து 826 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தஞ்சை மாவட்டத்தில் மழை ஓய்ந்ததால், வயல்களில் தேங்கிய மழைநீர் வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மழைநீர் வடிந்து வருவதால் பயிர்கள் பாதிப்பு குறித்தும் வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேளாண்மை துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, மழை நீரில் மூழ்கிய பயிர்களுக்கு தமிழக அரசு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை ஓய்ந்ததால் நெல் வயல்களில் தேங்கிய நீரை வடிகட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article