தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.69 லட்சம் ஹெக்டோில் பயிர்கள் சாகுபடி மும்முரம்

1 month ago 5

* வாய்க்காலில் தண்ணீர் வரத்து தொடங்கியது

* விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.69 லட்சம் ஹெக்டோில் பயிர் சாகுபடி மும்முரமாக நடைபெறுகிறது. வாய்க்காலில் தண்ணீர் வரத்து தொடங்கியதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தஞ்சையை அடுத்த 8 கரம்பை பகுதியில் சம்பா சாகுபடி சிறப்பு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டத்திலேயே முதன்மை மாவட்டமாக திகழ்வது தஞ்சாவூர். இந்த மாவட்டத்தில் 70 சதவீத மக்கள் விவசாய தொழிலிலும், அது தொடர்புடைய வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 3.39 லட்சம் ஹெக்டோில், சுமார் 2.69 லட்சம் ஹெக்டோில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கிவருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதுதவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். தஞ்சை மாவட்டம் முழுவதும் 3.50 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தற்போது, தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 2.90 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது.

திருசையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவோணம், அதினாம்பட்டினம், சேதுபவாசத்திரம் உள்ளிட்ட பகுதியில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்தது. காவிரி டெல்டா பாசத்திற்காக கடந்த ஜூலை மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது அனைத்து ஏரி, குளங்களிலும் தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சம்பா சாகுபடி பொருத்தவரையில் விவசாயிகள் நீண்டநாட்கள் ரகமான நெல்லை தான் சாகுபடி செய்வார்கள். இதனால் விவசாய பணிகள் தஞ்சாவூர் பகுதியில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மழை ஓய்ந்துள்ளதால் ஒரு சில பகுதியில் களை மண்டி உள்ள இடங்களில் களை எடுக்கும் பணிகளும் நடைபெறுகிறது. விவசாயிகள் மருந்து தௌிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்: ஒரு பக்கம் கல்லணை கால்வாய் மறுபுறம் வெண்ணாறு ஆற்றுப் பாசனத்தை நம்பிய விவசாயிகள் உள்ளனர். ஒரு சிலர் பம்பு செட்டு வைத்து முப்போகம் சாகுபடி செய்கின்றனர். தற்போது ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. இதனால் சம்பா சாகுபடியை தொடங்கியுள்ளோம்.

இந்நிலையில், கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக தீவிரமாக பெய்த காற்றுடன் கூடிய கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 2,500 ஏக்கரில் நெல் பயிர்கள் சாய்ந்துள்ளன.
இதுகுறித்து கணக்கீடும் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் என்னென்ன உரங்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே நடவுசெய்யப்பட்ட இடங்களில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி விட்டன. இவ்வாறு அவர்கள் கூறனர்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.69 லட்சம் ஹெக்டோில் பயிர்கள் சாகுபடி மும்முரம் appeared first on Dinakaran.

Read Entire Article