தஞ்சாவூர் பெரியகோயிலில் கவர்னர் தரிசனம்

2 months ago 11

தஞ்சாவூர்: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, மகன் ராகுலுடன் சென்னையில் இருந்து விமானத்தில் நேற்று காலை திருச்சி வந்தார். பின்னர் தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுத்தார். மதியம் 12.30 மணியளவில் தஞ்சை சரசுவதி மகாலுக்கு சென்ற கவர்னரை, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அங்கு சந்திர மவுலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த கவர்னர், நூலகத்தில் உள்ள ஓலை சுவடிகள், அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். ராஜராஜசோழன் வரலாறு குறித்த வீடியோ காட்சிகளை பார்வையிட்டார்.

பின்னர் மாலை 4 மணியளவில் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று வராகி அம்மன், மராட்டா விநாயகர் மற்றும் பெருவுடையார் பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தார். மாலை 5.30 மணிக்கு காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்ற கவர்னர், இரவு 7.30 மணியளவில் விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.

The post தஞ்சாவூர் பெரியகோயிலில் கவர்னர் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article