தஞ்சாவூர்,
மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி (26) பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்தப்பட்டார். இதனையடுத்து ஆசிரியை ரமணி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார்.
ஆசிரியை ரமணியை குத்திக் கொன்றதாக சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியை ரமணியை ஒருதலையாக காதலித்து வந்த மதன்குமார், கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை கழுத்தில் குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரமணியின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் மதன் குமார் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.