தஞ்சாவூரில் லாபகரமான பால் உற்பத்தி பயிற்சி

1 month ago 9

 

தஞ்சாவூர், அக். 11: தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மையம், ஆராய்ச்சி மையம் சார்பில் லாபகரமான பால் உற்பத்தி குறித்து பயிற்சி முகாம் வருகிற 15ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் விருப்பமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ள அலுவலகத்தில் நேரிடையாக வந்து ஆதார் நகலுடன் ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பயிற்சியில் 30 பேர் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள், பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ், கையேடுகள், பல்துறை சார்வல்லுநர்களால் வகுப்புகள் நடத்தப்படும். வங்கி மற்றும் மாவட்ட தொழிற் மைய அலுவலர் மூலம் பண்ணைத் தொடங்க மானியத்துடன் கூடிய நிதி பெற வழி காட்டப்படும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

The post தஞ்சாவூரில் லாபகரமான பால் உற்பத்தி பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article