தச்சுத்தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

3 hours ago 2

மதுரை, ஜன. 19: மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்தவர் கதிர்வேல்(44). தச்சுத்தொழிலாளியான இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று டூவீலரில் அனுப்பானடி ரயில்வே கேட் பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த கதிர்வேலின் மனைவி மற்றும் மகன் சம்பவ இடத்திற்கு சென்று, 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கதிர்வேலின் மனைவி மேரி தெற்குவாசல் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தச்சுத்தொழிலாளி மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Read Entire Article