தசரா பண்டிகையை முன்னிட்டு குலசேகரப்பட்டினத்திற்கு அக்.16ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல்

3 months ago 22

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் தசரா பண்டிகையை முன்னிட்டு அக்.3ம் தேதி முதல் 16ம் தேதி வரை சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்திற்கும் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தசரா முடிந்து திரும்ப ஏதுவாக அக்.13ம் தேதிமுதல் 16ம் தேதிவரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து திரும்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

The post தசரா பண்டிகையை முன்னிட்டு குலசேகரப்பட்டினத்திற்கு அக்.16ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article