தங்கம் விலையில் மாற்றம் இல்லை: இன்றைய விலை நிலவரம்

1 day ago 2

தங்கம் விலை கடந்த மாதம்  22-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த 15-ந்தேதி தங்கம் விலை மளமளவென சரிந்து ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை நேற்று முன் தினம், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு சவரன் ரூ.71,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் (22 கேரட்) விலை நிலவரம்:

30-05-2025 - ஒரு சவரன் ரூ.71,360, ஒரு கிராம் ரூ.8,920

29-05-2025 - ஒரு சவரன் ரூ.71,160, ஒரு கிராம் ரூ.8,895

28-05-2025 - ஒரு சவரன் ரூ.71,480 ஒரு கிராம் ரூ.8,935

27-05-2025 - ஒரு சவரன் ரூ.71,960 ஒரு கிராம் ரூ.8,995

26-05-2025 - ஒரு சவரன் ரூ.71,600, ஒரு கிராம் ரூ.8,950

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:

30-05-2025 - ஒரு கிராம் ரூ.111

29-05-2025 - ஒரு கிராம் ரூ.111

28-05-2025 - ஒரு கிராம் ரூ.111

27-05-2025 - ஒரு கிராம் ரூ.111

26-05-2025 - ஒரு கிராம் ரூ.111

Read Entire Article