சென்னை: தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்தது. தங்கம் விலை கடந்த அக்ேடாபர் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டது. அக்டோபர் 31ம் தேதி ஒரு பவுன் ரூ.59,640க்கு விற்பனையானது. இது வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது. இந்த நிலை இந்த மாதமும் நீடித்து வருகிறது. கடந்த வாரம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 வரை உயர்ந்தது. தொடர்ந்து கடந்த 13ம் தேதி பவுனுக்கு ரூ.200, 15ம் தேதி பவுனுக்கு ரூ.80, 16ம் தேதி பவுனுக்கு ரூ.400, நேற்று பவுனுக்கு ரூ.480 என உயர்ந்து பவுன் ரூ.59,600க்கும் விற்பனையானது.
வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.7,435க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.59,480க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.104க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. வழக்கமாக சனிக்கிழமையன்று காலையில் என்ன விலையில் தங்கம் விற்கிறதோ, மாலையிலும் அதே விலையில் தான் விற்பனையாவது வழக்கமாக உள்ளது.
அதனால், இன்று மாலையில் காலை நிலவரப்படியே தங்கம் விற்பனையாக வாய்ப்பு உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், சனிக்கிழமை விலையிலேயே நாளை தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
The post தங்கம் விலையில் திடீர் மாற்றம்; பவுனுக்கு ₹120 குறைந்தது appeared first on Dinakaran.