சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1.560 குறைந்து ரூ.68.880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்து நகை பிரியர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. 74,500 வரை சென்ற ஒரு சவரன் தங்கம் விலை தற்போது 70 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1560 குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலை கடந்த 12 ஆம் தேதி ஒரே நாளில் இரண்டு முறை விலை குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. தங்கம் விலை குறைந்ததால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் நேற்று விலை மீண்டும் குறைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று(மே14) சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.8805க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109க்கும், ஒரு கிலோ ரூ.1,09,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
* இன்றைய நிலவரம்:
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1.560 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8,610க்கும் சவரன் ரூ.68.880க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.70,000க்கு கீழ் சென்றது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,560 குறைந்து ரூ.68.880க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.