தங்கம் விலை சற்று குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?

7 months ago 23

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்தது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,090-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article