
சென்னை,
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. 13-ந்தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.960 குறைந்து சற்று ஆறுதலை கொடுத்தது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,890-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்தது. இந்த நிலையில் இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.