தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்தது.! சென்னையில் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720-க்கு விற்பனை

2 hours ago 2

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அதன் படி இந்த இரண்டிலும் முதலீடு செய்தவர்களுக்கு எப்போதும் நஷ்டம் ஏற்பட்டதில்லை. நிலத்தில் முதலீடு செய்தால் கூட அத்தியாவசிய தேவைக்கு பணத்தை திரும்ப பெற முடியாத நிலை இருக்கும். எனவே தங்கத்தில் முதலீடு செய்தால் எந்த நேரத்திலும் பணத்தை அள்ளிக்கொடுக்கும். எனவே கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைக்கு உடனடியாக பணம் கிடைப்பதால் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது.

தங்கம் விலை கூடினாலும், குறைந்தாலும் தங்கத்தை வாங்க நகைக்கடைகளில் எப்போதும் கூட்டம், கூட்டமாகவே காணப்படும். மேலும் தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் யாரும் எதிர்பார்க்க முடியாத வகையில் உயர்ந்துள்ளது. 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு சவரன் தங்கம் 60ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது. அந்த வகையில் தங்கத்தின் முதலீடு தற்போது இந்தியா மட்டுமல்ல மற்ற நாடுகளிலும் அதிகரித்துள்ளது. ஆனால் அடுத்த அடுத்த சில நாட்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு காரணமாக தங்கத்தின் விலை சரிய தொடங்கியது.

ஒரு சவரனுக்கு 4ஆயிரம் ரூபாய் வரை குறைந்தது. இந்த விலை குறைவு ஒரு சில நாட்கள் மட்டுமே நீடித்த நிலையில் மீண்டும் ஏறியது. மீண்டும் பழையபடி குறைய தொடங்கியது. அதன் படி இரண்டு நாட்களில் 1500 ரூபாய் அளவிற்கு குறைந்தது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,090-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.98-க்கு விற்கப்படுகிறது.

The post தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்தது.! சென்னையில் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article