சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 55 வாகனங்களில் இருந்து தக்காளி வருவது வழக்கம். இதில், வரத்து குறைவு மற்றும் மழையின் காரணமாக நேற்று காலை 32 வாகனங்களில் குறைவான அளவே தக்காளி வந்ததால் தக்காளியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த இருதினங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கும், நேற்று முன்தினம் ரூ.80க்கும், இதனை தொடர்ந்து நேற்று காலை ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ் முத்துகுமார் கூறுகையில் மழை குறைந்தால்தான் மீண்டும் தக்காளியின் விலை குறையும் என்றார்.
The post தக்காளி விலை தொடர்ந்து உயர்வு appeared first on Dinakaran.