தக்கலை அருகே மின்கம்பத்தில் டாரஸ் லாரி மோதல்

2 months ago 9

*அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்

குமாரபுரம் : தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதி வழியாக கேரளா நோக்கி நேற்று முன்தினம் அதிகாலை டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த 2 மின் கம்பங்களில் அடுத்தடுத்து மோதியது.

மோதிய வேகத்தில் மின்கம்பங்களில் இருந்த மின் கம்பிகள் அறுந்து லாரி மீது விழுந்தன. அப்போது மின்சாரம் தடைபட்டதால் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் அந்த பகுதியில் உள்ள மொத்த மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து சேதமடைந்த மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

லாரி மீது விழுந்து கிடந்த மின்கம்பிகளையும் பத்திரமாக அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கனரக லாரிகளை ஓட்டிவரும் டிரைவர்கள் சிலர் குடிபோதையிலும், அதிவேகமாகவும் செல்கின்றனர். இதனால் தொடர்ந்து விபத்து நடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தக்கலை அருகே மின்கம்பத்தில் டாரஸ் லாரி மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article