
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் (30-06-2025 முதல் 06-07-2025 வரை) எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
படங்கள் | ஓ.டி.டி தளங்கள் |
தண்டர்போல்ட்ஸ் | அமேசான் பிரைம் |
தி சேண்ட் மேன் | நெட்பிளிக்ஸ் |
மெட்ராஸ் மேட்னி | டென்ட்கொட்டா, சன் நெக்ஸ்ட் |
குட் வைப் | ஜியோஹாட்ஸ்டார் |
உப்பு கப்புரம்பு | அமேசான் பிரைம் |
பரமசிவன் பாத்திமா | ஆஹா தமிழ் |
தக் லைப் | நெட்பிளிக்ஸ் |
பத்து மாசம் | சிம்பிலி சவுத் |
ராஜபுத்திரன் | சிம்பிலி சவுத் |
கண்ணீரா | டென்ட்கொட்டா |
தி ஓல்ட் கார்ட் 2 | நெட்பிளிக்ஸ் |
"தண்டர்போல்ட்ஸ்"
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் எம்.சி.யுவின் 36-வது படமாக உருவாகி உள்ள படம் 'தண்டர்போல்ட்ஸ்'. பிரபல இயக்குனர் ஜேக் ஷ்ரேயர் இயக்கத்தில் லூயிஸ் புல்மேன், ஜெரால்டின் விஸ்வநாதன், ஹாரிசன் போர்டு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 1ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
"தி ஓல்ட் கார்ட் 2"
இந்த சூப்பர் ஹீரோ படத்தில் அண்டியாக சார்லிஸ் தெரோன் நடித்திருக்கிறார். இதை விக்டோரியா மஹோனி இயக்கியுள்ளார், மேலும் கிரெக் ருக்கா திரைக்கதை எழுதியுள்ளார். இப்படம் கடந்த 2ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
"தக் லைப்"
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு கூட்டணியில் வெளியான படம் தக் லைப். இந்த படத்தில் திரிஷா, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
"மெட்ராஸ் மேட்னி"
கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட் நடித்துள்ள திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'. இதில் சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை டென்ட்கொட்டா, சன்நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
"குட் வைப்"
நடிகையும் திரைப்பட இயக்குனருமான ரேவதி இயக்கியுள்ள தொடர் குட் வைப். இதில் பிரியாமணி, சம்பத் ராஜ் மற்றும் ஆரி அர்ஜுனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
"உப்பு கப்புரம்பு"
இயக்குனர் சசி இயக்கத்தில் 'உப்பு கப்புரம்பு' என்ற தெலுங்கு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு வசந்த் மரியங்கண்டி கதை எழுதியுள்ளார். நடிகர் சுகாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 90 களில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது. இப்படம் நாளை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
"பரமசிவன் பாத்திமா"
விமல் நடிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் வெளியான படம் பரமசிவன் பாத்திமா. இதில் நாயகியாக சாயாதேவி நடித்துள்ளார். இந்த படம் காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசும் வகையில் உருவாகியுள்ளது. இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.