தகவல் தெரிவிக்காமல் பாக். பெண்ணை மணந்த சிஆர்பிஎப் வீரர் டிஸ்மிஸ்

1 week ago 3

புதுடெல்லி: உரிய தகவல் தெரிவிக்காமல் பாக். பெண்ணை மணந்த சிஆர்பிஎப் வீரர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பாகிஸ்தான் பெண்ணைத் திருமணம் செய்த சிஆர்பிஎஃப் ஜவானை பணிநீக்கம் செய்தது. ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படை ஜவான் முனீர் அகமது. இவர் கடந்த ஆண்டு மே மாதம் 24ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த மேனல் கான் என்பவரை வீடியோ அழைப்பில் திருமணம் செய்து செகாண்டார். முனீர் அகமது தற்போது சிஆர்பிஎப் படையின் 41வது பட்டாலியனில் பணியமர்த்தப்பட்டார்.

திருமணத்திற்கு பிறகு தனது மனைவி மேனல் கானை இந்தியா வரவழைத்தார். தற்போது வரை அவர் இங்கு இருக்கிறார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானியர் வெளியேற பிறப்பித்த உத்தரவால் சிஆர்பிஎப் வீரரின் இந்த ரகசிய திருமணம் தெரிய வந்தது. இதையடுத்து முனீர் அகமது உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அவரது செயல் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டதால், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. சிஆர்பிஎப் செய்தித் தொடர்பாளர் டிஐஜி எம். தினகரன் கூறுகையில்,’பாகிஸ்தான் நாட்டவருடனான தனது திருமணத்தை மறைத்து, விசா செல்லுபடியாகும் காலத்தை மீறி வேண்டுமென்றே அவரை தங்க வைத்ததற்காக முனீர் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது நடவடிக்கைகள் பணி நடத்தையை மீறுவதாகவும், தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்பதாகவும் கண்டறியப்பட்டது’ என்றார்.

The post தகவல் தெரிவிக்காமல் பாக். பெண்ணை மணந்த சிஆர்பிஎப் வீரர் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.

Read Entire Article